×

அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

நாமக்கல், பிப்.8: நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை சார்பில், தமிழ் மன்றம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழாவிற்கு, தலைமை ஆசிரியர் பெரியண்ணன் தலைமை வகித்தார். முதுகலைப் பொருளியல் ஆசிரியர் ஜெகதீசன் வரவேற்றார். முதுகலைத் தமிழாசிரியர் ராமு, தமிழாசிரியர் அம்சவேணி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக எழுத்தாளரும், கவிஞருமான நாணற்காடன் கலந்து கொண்டு மாணவர்கள் நாள்தோறும் புத்தகம் வாசிக்க வேண்டும் என்பதையும், தினமும் புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் கூறினார். விழாவில், பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றப் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழாசிரியை நவமணி நன்றி கூறினார்.

The post அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா appeared first on Dinakaran.

Tags : Tamilkudal Festival ,Govt ,Namakkal ,Tamil Koodal Festival ,Namakkal Government ,Boys South Higher Secondary School ,School Education Department ,Headmaster ,Periyannan ,Jagatheesan ,Government ,
× RELATED குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்