×

சோழவந்தான் அருகே மயானத்திற்கு செல்ல பாலம் அமைத்து தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

சோழவந்தான், பிப். 8: சோழவந்தான் அருகே மயானத்திற்கு செல்ல பாலம் இல்லாததால் வயல்வெளி வழியாக இறந்தவர்கள் உடலை தூக்கிச் செல்லும் அவல நிலை தொடர்கிறது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட நரிமேடு பகுதியில் ஒரு சமுதாயத்திற்குரிய தனி மயானம் உள்ளது. இதில் மேலநாச்சிகுளம், கீழ் நாச்சிகுளம், கரட்டுப்பட்டி, போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் வசிக்கும் அந்த சமுதாயத்தினர் பரம்பரையாக அந்த மயானத்தில் இறந்தவர்கள் உடலை நல்லடக்கம் செய்து வந்தனர்.

இந்த மயானத்திற்கு வருவதற்காக அருகில் பெரியார் பாசனக் கால்வாயில் முன்பு படிக்கட்டு அமைத்திருந்தனர். இதில் ஒரு கரையிலிருந்து வாய்க்காலுக்குள் இறங்கி மறு கரையில் மயானத்திற்கு க்கு சென்று வந்தனர்.இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் இக்கால்வாய் அகலப்படுத்தும் போது படிகளை மறைத்து சமதளமாக்கி விட்டனர்.இதனால் மயானத்திற்கு செல்லும் பாதை தடைபட்டதால் தற்போது வேறு பாதையில் நெல் வயலுக்குள் இறங்கி மயானத்திற்கு செல்லும் சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில் நேற்று கரட்டுப்பட்டியைச் சேர்ந்த மோகன் (53) என்பவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இறந்த அவரது உடலை அவரது உறவினர்கள் வயல்வெளியில் வரப்பு வழியாக மிகுந்த சிரமத்துடன் கொண்டு சென்று வேதனையுடன் நேற்று நல்லடக்கம் செய்தனர். இதே போல் ஒவ்வொரு முறையும் இறந்தவர்களை தூக்கி சென்று நல்லடக்கம் செய்வதில் பெரும் துன்பத்தை இவர்கள் அனுபவித்து வருகின்றனர். எனவே மயானத்திற்கு செல்லும் பகுதியில் கால்வாய் மேல் விரைவில் பாலம் அமைத்து கொடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சோழவந்தான் அருகே மயானத்திற்கு செல்ல பாலம் அமைத்து தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cholavanthan ,Cholavandan ,Narimedu ,Nachikulam Panchayat ,Cholavanthan, Madurai district ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை