×

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் நீதிமன்றத்தில் சரண்

 

உசிலம்பட்டி, பிப். 8: தேனியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்துள்ள பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயில் மில் அருகே வைத்து மர்ம கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தேனி அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன் (32), சின்னடொர்ரி என்ற குமரேசன்(32), பாஸ்கரன் (28) ஆகியோர் இந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தங்களை போலீசார் தேடி வருவதாக கேள்விப்பட்டதை தொடர்ந்து நேற்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் முன்பு சரண் அடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன், ஆஜரான மூன்று பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

The post கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Tags : Usilampatti ,Theni ,Tamilselvan ,Pomayagaoundanpatti ,Periyakulam, Theni district ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே இட்லி சுட பார்க்கிறார் மோடி: போட்டு தாக்கும் கருணாஸ்