×

கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

 

சிங்கம்புணரி, பிப்.8: சிங்கம்புணரி கால்நடை மருத் துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிங்கம்புணரி-திண்டுக்கல் சாலையில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. பழைய ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்த கால்நடை மருத்துவமனைக்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு தற்போது புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் மருத்துவமனை வளாகத்தில் மது அருந்துதல், வெளியாட்கள் தங்கி சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் மருத்துவமனை அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. எனவே மருத்துவமனை சுற்றியிலும் காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Singampunari ,clinic ,Singampunari-Dindigul road ,Otu ,Dinakaran ,
× RELATED மருத்துவர்களுக்கு பாராட்டு