×

மோட்டார் வாகன வழக்கு, குடும்ப நல வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு நல்லதே செய்ய வேண்டும்: வழக்கறிஞர்களுக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் நீதிபதி எஸ்.வைத்தியநாதனுக்கு வழி அனுப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சுரேஷ்குமார், எம்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகள், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், துணை தலைவர் அறிவழகன், பொருளாளர் ஜி.ராஜேஷ், மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், 2013ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியை தொடங்கிய எஸ்.வைத்தியநாதன் இதுவரை 67,000 வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டுள்ளார் என்றார். ஏற்புரையாற்றிய நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக செல்வது மகிழ்ச்சியாக இருந்தாலும், இந்த பாரம்பரிய கட்டிடத்தில் பணியாற்றுவது முடிவுக்கு வருவது வருத்தமாக உள்ளது. நேர்மையான வழக்கறிஞர்களே பார் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மோட்டார் வாகன விபத்து, குடும்ப நலன் சார்ந்த வழக்குகளில் வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்றார்.

The post மோட்டார் வாகன வழக்கு, குடும்ப நல வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு நல்லதே செய்ய வேண்டும்: வழக்கறிஞர்களுக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Judge ,S. Vaithianathan ,Chennai ,Senior ,Chennai High Court ,S. Vaithianathan Meghalaya ,Chief Justice ,High ,Court ,Vaithianadan Pathway Ceremony ,S. V. Gangapurwala ,Dinakaran ,
× RELATED சென்னை விஐடி பல்கலைக்கழக தினவிழா...