×

ஆயுதப் படைகளின் விண்வௌி தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.25,000 கோடி ஒதுக்கீடு: முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் சவுகான் தகவல்

புதுடெல்லி:ஆயுதப் படைகளின் விண்வௌி தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் கூறியுள்ளார்.
டெல்லி கண்டோன்மென்டில் உள்ள மானசா மையத்தில் 3 நாள் விண்வௌி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியான டெஃப்சாட் நேற்று தொடங்கியது. இதனை முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அனில் சவுகான், “விண்வௌி விரிவாக்கம் முதல் ஆய்வு வரை உயர்திறன் மிக்க தற்சார்பு விண்வௌி பாதுகாப்பு சூழலை உருவாக்குவதற்கான தருணம் இது.
அதிவேக, பாதுகாப்பான செயற்கை கோள் உதவியுடனான தகவல் தொடர்பை மேம்படுத்துவது அவசியம். நிலம், வானம், கடல் போன்ற களங்களில் போர்த்திறனை மேம்படுத்த விண்வௌியை ஒரு சக்தியாக பயன்படுத்த முடியும். ஆயுதப்படைகளின் திறன்களை வலுப்படுத்த விண்வௌியை மூலதனமாக்கும் முயற்சியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ரூ.25,000 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

The post ஆயுதப் படைகளின் விண்வௌி தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.25,000 கோடி ஒதுக்கீடு: முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் சவுகான் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tri-Army ,Chief General Chauhan ,New Delhi ,Chief of Army Staff General ,Anil Chauhan ,DEFSAT ,Manasa Center ,Delhi Cantonment ,Tri ,Army ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு