×

சம்பளம், சாப்பாடு தராமல் கொடுமை குவைத்தில் இருந்து படகில் மும்பை வந்த 3 தமிழர்கள் கைது

மும்பை: குவைத்தில் இருந்து படகில் தப்பி மும்பை வந்த 3 தமிழர்களை மும்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மும்பை கேட் வே ஆப் இந்தியா பகுதிக்கு நேற்று முன்தினம் படகு ஒன்று வந்தது. கடலோர ரோந்துப் பணியில் இருந்த போலீசார், அந்த படகை மடக்கினர். அதில் 3 பேர் இருந்தனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், படகில் இருந்த 3 பேரும் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள். அவர்களின் பெயர்கள் விஜய் வினோத் அந்தோணி(29), நிடிசோ டிட்டோ(31), சகாய அந்தோணி அனிஷ்(29). 2 ஆண்டு முன்பு வேலைக்காக ஏஜன்ட் மூலம் குவைத் சென்ற அவர்களுக்கு சரியான சாப்பாடு வழங்காததோடு, சம்பளம் தராமல் வேலை வாங்கியுள்ளனர்.

பாஸ்போர்ட் கைவசம் இல்லாமல் அவர்களிடம் சிக்கி இருந்ததால் அவர்களால் வெளியேற முடியவில்லை. இதையடுத்து படகு மூலம் அவர்கள் குவைத்தில் இருந்து தப்பித்து மும்பை வந்துள்ளனர். இவர்களின் பாஸ்போர்ட் மற்றும் உடமைகளை சோதனை செய்ததில் சந்தேகப்படும் வகையில் எதுவும் இல்லை. எனினும் சட்டவிரோதமாக அவர்கள் கேட் வே ஆப் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சம்பளம், சாப்பாடு தராமல் கொடுமை குவைத்தில் இருந்து படகில் மும்பை வந்த 3 தமிழர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Kuwait ,Tamils ,Mumbai Gateway of ,India ,
× RELATED புகைப்பிடித்துக் கொண்டே விமான...