×

சமுதாய வள பயிற்றுனர்களுக்கு ஊட்டச்சத்து சுகாதார பயிற்சி முகாம்

மண்டபம்,பிப்.7: மண்டபம் பகுதியில் கர்ப்பிணி பெண்களை பாதுகாப்பது,ஊட்டச்சத்து உணவு வழங்குவது குறித்து சமுதாய வள பயிற்றுனர்களுக்கு மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊட்டச்சத்து சுகாதார பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.  உச்சிப்புளி பகுதியில் அமைந்துள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நேற்று சமுதாய வள பயிற்றுநர்களுக்கான உணவு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு திட்ட இயக்குநர் ஸையித்சுலைமான் தலைமை வகித்தார். இந்த முகாமில் வளரிளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பொருள்கள் எவ்வாறு வழங்குவது மேலும் அவர்களை ஊக்குவித்து மனதளவில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல் போன்ற பயிற்சி முகாமில் அளிக்கப்பட்டது.

மேலும் முகாமில் கலந்து கொண்ட சமுதாய வள பயிற்றுனர்கள், வளரிளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுத்து அவர்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும். அதற்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துகொண்டனர். இந்த முகாமில் மண்டம் ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சமுதாய வள பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

The post சமுதாய வள பயிற்றுனர்களுக்கு ஊட்டச்சத்து சுகாதார பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Resource ,Mandapam ,District State Rural Livelihood Movement for Community Resource Instructors ,Mandapam Panchayat Union ,Uchipuli ,Nutrition Health Training Camp ,Resource Instructors ,Dinakaran ,
× RELATED தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை