×

ஈடி, ஐடி வந்தால் சந்திக்க தயார் விருந்து வைத்து உபசரிப்போம்: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்று கூறி இருக்கிறார்கள். அவர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார் என்று எண்ணுகிறோம். இஸ்லாமிய சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கோப்புகளில் சில கோப்புகளுக்கு கையொப்பமாகி உள்ளது. இன்னும் ஆளுநர் அனுப்ப வேண்டிய கோப்புகள் உள்ளது. கொடநாடு வழக்கில் தடையவியல் அறிக்கையை பொறுத்து அடுத்த கட்ட விசாரணை நகரும். ஓபிஎஸ், இபிஎஸ் பாஜவிடம் கொத்தடிமைகளாக இருந்து அவர்களது கட்சியை அடகு வைத்தவர்கள்.

ஓபிஎஸ்சுக்கு கொடநாடு வழக்கு குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. எங்களை பொறுத்தவரை கொடநாடு வழக்குக்கு புத்துயிர் கொடுத்து செயல்பட்டு வருகிறார் தமிழ்நாடு முதல்வர். எந்த நேரத்திலும் அமலாக்க துறையை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஈ.டி, ஐ.டி யார் வந்தாலும் வரட்டும். பிரச்னை எதுவும் இல்லை. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயமிருக்கும். எங்களுக்கு எந்த மடியிலும் கனமும் இல்லை, வழியில் பயமும் இல்லை. அமலாக்கத்துறை வந்தால் காபி விருந்து வைத்து உபசரிக்க தயாராக இருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post ஈடி, ஐடி வந்தால் சந்திக்க தயார் விருந்து வைத்து உபசரிப்போம்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Raghupathi ,Pudukottai ,Tamil Nadu ,Chief Justice ,Madras High Court ,KKSSR Ramachandran ,Islamic… ,ED ,
× RELATED புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில்...