- சத்தன்குளம் தெற்கு யூனியன் டிஎம்கே கிளை
- சதங்குளம்
- தென் யூனியன் டிஎம்கே கட்சி
- முகவர்கள்
- தென் யூனியன் திமுக
- யூனியன் கவுன்சில்
- ஜனாதிபதி
- இராஜபாண்டியன்
- மாநில ஊராட்சி
- இந்திரகாசி
- யூனியன்
- சத்தாங்குளம் தெற்கு
- டிஎம்கே கட்சி முகவர்கள் கூட்டம்
- தின மலர்
சாத்தான்குளம், பிப். 7: சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக பாக முகவர்கள் கூட்டம், ஒன்றிய அவைத்தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாலமுருகன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலுக்காக 5 பேர் கொண்ட குழு அமைப்பது, வாக்காளர் பட்டியலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் விவரங்களை சேகரிப்பது, பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய பாடுபடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய பொருளாளர் ஆனந்த், மாவட்ட பிரதிநிதிகள் சித்திரை, அந்தோணி ஜெயசீலன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநரணி துணை அமைப்பாளர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஜெயராமன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ரோஸ்லின் கலாவதி, பூத் முகவர்கள் ஜெகநாதன், ஜான்சன், செல்வன், கிருஷ்ணன், ஜான்திலகம், முருகேசன் ஆசிரியர், மிக்கேல், சுந்தரராஜ், அமிர்தராஜ், சேவியர்ராஜ், செல்வன், மலர்ராஜ், நிர்மல், மாரிமுத்து, ராஜ்குமார், அருள், பாஸ்கரதாஸ், ராஜசிங், கிளை செயலாளர்கள் தாமோதரன், பண்டாரம், சித்திரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக பாக முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.