- திமுக
- திருவள்ளூர்
- கடம்பத்தூர் ஒன்றியம்
- பிரபாகரன்
- லாசர்
- கொண்டஞ்சேரி
- Kadambathur
- கடம்பத்தூர் யூனியன்
- திமுக இளைஞர்
- தின மலர்
திருவள்ளூர்: புல்லட் மீது சரக்கு வாகனம் மோதியதில் கடம்பத்தூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பரிதாபமாக உயிரிழந்தார். கடம்பத்தூர் ஒன்றியம் கொண்டஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் லாசர் என்பவரின் மகன் பிரபாகரன் (38). இவர் கடம்பத்தூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவர் நேற்று தனது புல்லட்டில் மப்பேடு கிராமத்தில் இருந்து கொண்டஞ்சேரியை நோக்கி சென்று கொண்டிருந்தார். மப்பேடு அருகே வளைவில் திரும்பியபோது எதிரே வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, பிரபாகரன் மீது மோதியது. இதில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மப்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரபாகரன் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சரக்கு வாகனம் மோதியதில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.