×

முன்விரோதம் காரணமாக உருட்டு கட்டையால் தம்பதி சரமாரி தாக்கு

திருத்தணி: முன்விரோதம் காரணமாக தம்பதியை உருட்டு கட்டையால் சரமாரி தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். திருத்தணி ஒன்றியம், மத்தூர் அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகரன். இவரது மனைவி அஸ்வினி (34). இவர் நேற்றுமுன்தினம் வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தார். அப்போது, மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (22) அந்த வழியாக வந்தார். இவர், முன்விரோதம் காரணமாக அஸ்வினியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அஸ்வினியின் கணவர் சேகரன், எதற்காக என் மனைவியுடன் வீண்தகராறு செய்கிறாய், உடனே இங்கிருந்து சென்றுவிடு என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த உருட்டை கட்டையால் கணவன், மனைவி என இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் இருவரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து அஸ்வினி திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீஸ் எஸ்ஐ ராக்கிகுமாரி ரவிச்சந்திரனை கைது செய்தார்.

The post முன்விரோதம் காரணமாக உருட்டு கட்டையால் தம்பதி சரமாரி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Shekaran ,Kothur ,Mathur ,Tiruthani Union ,Ashwini ,Dinakaran ,
× RELATED சாலைப் பணிகள் முடிக்காத வரை தேர்தல்...