×

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: போராடி வென்றார் டாமிக்

சென்னை: ஏடிபி சேலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் பெர்னார்ட் டாமிக் போராடி வென்றார்.போலந்தின் ஓலப் பீக்ஸ்கோவ்ஸ்கியுடன் (19 வயது, 522வது ரேங்க்) நேற்று மோதிய டாமிக் (31 வயது, 277வது ரேங்க்) 2-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 6-4 என 2வது செட்டை கைப்பற்ற சமநிலை ஏற்பட்டத்து.

இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீரர்களும் விடாப்பிடியாகப் போராடியதால் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த போட்டியில், டாமிக் 2-6, 6-4, 7-6 (7-2) என்ற செட்களில் போராடி வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 9 நிமிடத்துக்கு நீடித்தது.

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் சக வீரர் பிரஜ்வல் தேவை எளிதாக வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 20 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இத்தாலியின் லூகா நார்டி, சாமுவேல் வின்சென்ட், டலிபோர் ஸ்விர்சினா (செக்.), யுகோ பிளாங்கெட் (பிரான்ஸ்), எவ்ஜெனி டான்ஸ்காய் (ரஷ்யா) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

The post சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: போராடி வென்றார் டாமிக் appeared first on Dinakaran.

Tags : Chennai Open Challenger Tennis ,Tomic ,Chennai ,Bernard Tomic ,ATP Challenger Chennai Open tennis ,Poland ,Olap Pieczkowski ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...