×

பட்டத்தை கைவிடுவதாக அறிவித்த ஜப்பான் அழகி கரோலினா ஷினோ!!

தோக்கியோ: ஜப்பான் அழகி பட்டத்தை வென்ற இளம்பெண் கரோலினா ஷினோ, தன் அழகி பட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார். உக்ரைனில் பிறந்தவரான கரோலினா ஷினோவின் தோற்றம், ஜப்பானியர் போலல்லாமல் ஐரோப்பியர் போல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. உக்ரைனில் பிறந்து ஜப்பானில் வளர்ந்தவராக இருந்த போதிலும் கரோலினா ஷினோவின் தோற்றம் பற்றி பலர் அதிருப்தி தெரிவித்து வந்தனர். மேலும், திருமணமான மருத்துவர் ஒருவருடன் கரோலினாவுக்கு தொடர்பு உள்ளதாக பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் கரோலினாவின் பூர்வீகமும் தனிப்பட்ட வாழ்க்கையும் சர்ச்சைக்கு உள்ளானதை அடுத்து அழகி பட்டத்தை திருப்பி அளித்துவிட்டார்.

The post பட்டத்தை கைவிடுவதாக அறிவித்த ஜப்பான் அழகி கரோலினா ஷினோ!! appeared first on Dinakaran.

Tags : Miss Japan ,Carolina Shino ,Tokyo ,Karolina Shino ,Ukraine ,Japan ,
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்