×

நஞ்சநாடு பகுதியில் சாலையோரம் வீசி எறியப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

ஊட்டி : ஊட்டி அருகே நஞ்சநாடு பகுதியில் சாலையோரம் வீசி எறியப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டம் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளும் பொது இடங்கள், வனங்களில் தூக்கி எறியப்படுவது தடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சேகரிக்கப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சிக்கும், இதர மக்கும் குப்பைகள் உரம் தயாரிப்பதற்கும் அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில் சமீபகாலமாக உள்ளாட்சி பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஊட்டி அருகே நஞ்சநாடு கிராமத்திற்கு செல்லும் சாலையோரத்தில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளும் தூக்கி எறியப்பட்டு அப்பகுதியே அசுத்தமாக காட்சியளிப்பதுடன் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகளை முறையாக அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post நஞ்சநாடு பகுதியில் சாலையோரம் வீசி எறியப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Nanjanadu ,Ooty ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED ஊட்டி ஏரி கரையோரத்தில் உள்ள நடைபாதை...