×

அமலாக்கத்துறை வந்தால் காபி விருந்து வைத்து உபசரிக்க தயாராக இருக்கிறோம்: அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: அமலாக்கத்துறை வந்தால் காபி விருந்து வைத்து உபசரிக்க தயாராக இருக்கிறோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,

இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல்

இஸ்லாமிய கைதிகளை பொறுத்தவரையில் நாங்கள் எடுத்த நடவடிக்கை போல வேறு எந்த அரசும் எடுக்கவில்லை. முன்கூட்டியே விடுதலை என்பதற்காக நடவடிக்கையில் கைதிகள் விடுதலை தொடர்பான கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கோடநாடு வழக்கில் தடயவியல் அறிக்கையை பொறுத்தே அடுத்தக்கட்ட முடிவு

கோடநாடு வழக்கில் தடயவியல் அறிக்கையை பொறுத்தே அடுத்தக்கட்ட முடிவு இருக்கும். இபிஎஸ்ஸும், ஒபிஎஸ்ஸும் பாஜகவிடம் கட்சியை அடகு வைத்தவர்கள்; அவர்கள் திமுக குறித்து பேசுவதா? என்றும் அவர் தெரிவித்தார்.

அமலாக்கத்துறை வந்தால் காபி விருந்து வைத்து உபசரிக்க தயார்

அமலாக்கத்துறையை எந்த நேரத்திலும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஈ.டி. வந்தாலும் சரி ஐ.டி. வந்தாலும் சரி, யார் வந்தாலும் வரட்டும் பிரச்சனை எதுவும் இல்லை என்று புதுக்கோட்டையில் அவர் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை வந்தால் காபி விருந்து வைத்து உபசரிக்க தயாராக இருக்கிறோம். கோடநாடு வழக்கில் தடயவியல் அறிக்கையை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

The post அமலாக்கத்துறை வந்தால் காபி விருந்து வைத்து உபசரிக்க தயாராக இருக்கிறோம்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Raghupathi ,Chennai ,Law Minister ,
× RELATED கச்சத்தீவை கொடுக்க கலைஞர்...