×

2024 மக்களவை தேர்தல்: குமரியில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பொதுமக்களிடம் கருத்து கேட்பு..!!

குமரி: மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கன்னியாகுமரியில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. 2024 மக்களவைத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி இருக்கும் சூழலில் திமுகவின் பணிகளை முடுக்கிவிட்டு உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் திமுக தலைமைக் கழக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்துப் பாதுகாப்பு குழு செயலாளர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன் எம்எல்ஏ, கே.ஆர்.என் ராஜேஸ்குமார் எம்பி, மாணவரணி செயலாளர் சிவிஎம் எழிலரசன் எம்எல்ஏ, அயலக அணி செயலாளர் எம்எம்.அப்துல்லா எம்பி, மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

இந்த குழு முதன்முதலாக நேற்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடிக்கு சென்றது. தூத்துக்குடியில் உள்ள மாலில் நடந்த கூட்டத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் இருந்து தேர்தல் குழு மனுக்களை பெற்றது. இந்நிலையில், இன்று கனிமொழி எம்.பி. தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், குமரியில் மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் பரிந்துரைகளை பெறுகின்றனர்.

நாகர்கோவில் தேரேகால் புதூரில் வணிகர்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்படுகிறது. இதேபோல், பிப்.7ல் மதுரையிலும், பிப். 8ல் தஞ்சாவூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. பிப்.9ல் சேலத்திலும், பிப். 10ல் கோவையிலும் பிப்.11ல் திருப்பூரிலும் திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் நடத்தவுள்ளது. தொழில்முனைவோர், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைத்துத்தரப்பு மக்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர்.

The post 2024 மக்களவை தேர்தல்: குமரியில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பொதுமக்களிடம் கருத்து கேட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,DMK Election Manifesto Preparation Committee ,Kumari ,Kanyakumari ,DMK ,Lok Sabha elections ,2024 Lok Sabha elections ,DMK Manifesto Preparation Committee ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...