×

பணி நீக்கத்தை கண்டித்து வருவாய் துறையினர் போராட்டம்

 

திருவாடானை, பிப்.6: ராமநாதபுரம் தாலுகாவில் வருவாய் ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தி, திருவாடானை தாலுகா அலுவலகத்தில் வருவாய்த் துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டம் செய்தனர். ராமநாதபுரத்தில் வருவாய் ஆய்வாளர் செந்தில் விநாயகம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட அளவில் வருவாய் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்தை அடுத்து நேற்று திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கார்த்திகேயன், சமூக நலத்திட்ட தாசில்தார் கணேசன் உட்பட வருவாய்த்துறை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாலுகா அலுவலகத்திற்கு வெளியே அமர்ந்து பணியை புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது. இதனால் தாலுகா அலுவலகத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது.
பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பரமக்குடி வட்டார தலைவர் காதர் முகைதீன் தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல் ராமநாதபுரம், கமுதி தாலுகா அலுவலகத்திலும் போராட்டம் நடந்தது.

The post பணி நீக்கத்தை கண்டித்து வருவாய் துறையினர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Thiruvadanai taluk ,Ramanathapuram taluk ,Ramanathapuram ,Senthil Vinayakam ,Revenue department ,Dinakaran ,
× RELATED திருவாடானை திருவெற்றியூரில் சுறுசுறுப்பாக நடக்கும் சுகாதார நிலைய பணி