×

வாலிபரின் மூக்கை கடித்த தொழிலாளி தாயம் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில்

அணைக்கட்டு, பிப்.6:அணைக்கட்டு அருகே தாயம் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரின் மூக்கை கடித்த தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அணைக்கட்டு தாலுகா அப்புக்கல் கிராமம் அருந்ததியர் காலனியைசேர்ந்தவர் பட்டன் மகன் மதன் (30), அதே கிராமத்தைச்சேர்ந்த குப்பன் மகன் முனிசாமி (26). இருவரும் தொழிலாளிகள். மதன், முனிசாமி இருவரும் நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் தாயம் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் முற்றியதில் முனிசாமி, மதனின் மூக்கை கடித்துள்ளார். இதில் மதனின் மூக்கில் காயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து மதன் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அணைக்கட்டு போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாலிபரின் மூக்கை கடித்த தொழிலாளி தாயம் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் appeared first on Dinakaran.

Tags : Patan ,Madan ,Arundhathiyar Colony ,Ambukkadu Taluk ,Kuppan ,
× RELATED பாவூர்சத்திரம் அருகே பைக் விபத்தில் மேலும் ஒருவர் பலி