×

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப்பயணம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்டறிந்தனர். நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் மக்களிடம் கருத்து கேட்பதற்காக நேற்று (5ம் தேதி) தொடங்கி வரும் 10ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

முதற்கட்டமாக நேற்று காலை சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அதிமுக தேர்தல் அறிக்கை குழு பயணம் மேற்கொண்டது. நேற்று மாலை இந்த குழு வேலூருக்கு பயணம் மேற்கொண்டது. இந்த பகுதிகளில், அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டனர். இன்று விழுப்புரம் மண்டலத்திலும், 7ம் தேதி தஞ்சாவூர், திருச்சி மண்டலத்திலும், 8ம் தேதி கோவை, மதுரை மண்டலத்திலும், 10ம் தேதி திருநெல்வேலி மண்டலத்திலும் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

The post நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப்பயணம் appeared first on Dinakaran.

Tags : AIADMK Election Manifesto Preparation Committee ,Chennai ,AIADMK ,Chengalpattu ,Tiruvallur ,Kanchipuram ,Lok Sabha general election ,Dinakaran ,
× RELATED அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி...