×

வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம் போட்டி அண்ணாமலை அறிவிப்பால் சர்ச்சை

அணைக்கட்டு: வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம் போட்டியிட உள்ளார் என்று அண்ணாமலை அறிவிப்பால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைக்குச் செல்லாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும். இந்த வேலூர் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு தோற்றவர் ஏ.சி.சண்முகம். அவர் ேதாற்றாலும் இந்த தொகுதி மக்களுக்காக பல்ேவறு உதவிகளை செய்து வருகிறார்.

இலவச மருத்துவ முகாம், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவதுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். வரக்கூடிய 2024 நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் நம்முடைய பிரதமர் மோடியின் ஆணைக்கிணங்க இந்த தொகுதியில் ஏ.சி.சண்முகம் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு பேசினார். ேவட்பாளரை இறுதி ெசய்து பாஜ கட்சி தலைமை இன்னும் அறிவிக்காத நிலையில் அண்ணாமலை வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசியதால் பரபரப்பும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

The post வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம் போட்டி அண்ணாமலை அறிவிப்பால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : A.C. Shanmugam ,Annamalai ,Vellore ,Aamkatu ,BJP ,State ,President ,Vellore District Dam ,
× RELATED ஏ.சி.சண்முகம் விரட்டியடிப்பு