×

காரில் கஞ்சா கடத்தல் 2 போலீஸ்காரர்கள் கைது: மெடிக்கல் லீவு எடுத்து கைவரிசை

திருமலை: காரில் கஞ்சா கடத்தியதாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தெலங்கானா மாநிலம் நர்சிபட்டினத்தில் இருந்து ஐதராபாத்திற்கு சிலர் காரில் கஞ்சா கடத்தி செல்வதாக பாலா நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்றிரவு பாச்சுபள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் 22 கிலோ கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. காரில் இருந்த 2 நபர்களை பிடித்து விசாரித்தனர்.அதில் பிடிபட்ட இருவரும் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா மூன்றாவது பட்டாலியனில் தலைமை காவலராக பணிபுரியும் சாகர்பட்நாயக்(35), கான்ஸ்டபிளாக பணிபுரியும் ஸ்ரீனிவாஸ்(32) என்பது தெரிய வந்தது. இருவரும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இருவரும் உடல் நலக்குறைவு என காரணம் கூறி சில நாட்களுக்கு முன்பு விடுப்பு எடுத்துள்ளனர்.

பின்னர் இருவரும் நேற்று நர்சிபட்டினத்தில் கஞ்சாவை வாங்கி, ஐதராபாத்திற்கு காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து பாச்சுபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து சாகர் பட்நாயக், ஸ்ரீனிவாஸ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ஸ்ரீ8 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். குற்றச்செயல்களை தடுக்க வேண்டிய போலீசாரே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post காரில் கஞ்சா கடத்தல் 2 போலீஸ்காரர்கள் கைது: மெடிக்கல் லீவு எடுத்து கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Andhra ,Telangana ,Narsipatnam ,Hyderabad ,
× RELATED ‘மார்க் போடாவிட்டால் சூனியம்...