×
Saravana Stores

நெல்லை அருகே ₹9.33 கோடியில் உயர்நிலை பாலம், சாலை அமைக்கும் பணி

*சபாநாயகர் அப்பாவு துவக்கிவைத்தார்

நெல்லை : ராதாபுரம் தொகுதியில் ரூ.9.33 கோடியில் உயர்நிலை பாலம், சாலை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு துவக்கிவைத்தார்.
ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட காவல்கிணறு ஊராட்சி லெப்பைக்குடியிருப்பில் ரூ.1.58 கோடியில் தரைப்பாலத்தை உயர்நிலை பாலமாக அமைக்கும் பணி, ரூ.1.28 கோடியில் காவல் கிணறு முதல் லெப்பைக்குடியிருப்பு வரை செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி, சமூகரெங்கபுரத்தில் ரூ.1.96 கோடியில் சமூகரெங்கபுரம் பேருந்து நிலையம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையை உறுதிப்படுத்துதல் மற்றும் பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி, ரூ.4.44 கோடியில் காரியாகுளத்திலிருந்து-சமூகரெங்கபுரம் வரை செல்லும் சாலையை சாலையை அகலப்படுத்தும் பணியை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு துவக்கிவைத்தார். தொடர்ந்து துரை குடியிருப்பு மேலூரில் ரூ.7 லட்சத்தில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து ரேஷன் கடை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், சாந்தி சுயம்பு ராஜ், ராதாபுரம் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜோசப்பெல்சி, நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சேகர், உதவிப் பொறியாளர்கள் முத்து முருகன், தினேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் இசக்கி பாபு, தாய் செல்வி இளங்கோ, பஞ். தலைவர்கள் இந்திரா சம்பு, அந்தோணி அருள், அரவிந்தன், நெல்லை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சமுகை முரளி, வர்த்தக அணி ராதாபுரம் ஒன்றிய அமைப்பாளர் தக்காளி குமார், ராதாபுரம் ஒன்றிய துணைச்செயலாளர் செழியன், சமூகரெங்கபுரம் துணைத் தலைவர் பேச்சியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post நெல்லை அருகே ₹9.33 கோடியில் உயர்நிலை பாலம், சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Nellai ,Speaker ,Appavu ,Radhapuram constituency ,Kavalginaru Panchayat ,Radhapuram ,Constituency ,Lepaikudiru ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை எதிரொலி நெல்லை மாவட்டத்தில் அமைச்சர் நேரு ஆய்வு