×

ராமநாதபுரத்தில் நாளை போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வு

ராமநாதபுரம், பிப்.5: ராமநாதபுரத்தில் ராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு 2ம் நிலை போலீஸ் பணிக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்ப்பு நாளை நடக்கிறது. இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி சந்தீஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, 2023ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர்(ஆண் மற்றும் பெண்) சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 737 ஆண் விண்ணப்பதாரர்களுக்கு நாளை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் காலை 6 மணி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்திறன், உடற் தகுதி தேர்வு நடக்கிறது. வரும் விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய அழைப்பு கடிதத்துடன், அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் வரவேண்டும். வரும் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும். செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ராமநாதபுரத்தில் நாளை போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Sivagangai ,S.P. Sandish ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’