×

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

 

சேந்தமங்கலம், பிப்.5: புதன்சந்தை அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருடிச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேந்தமங்கலம் அடுத்துள்ள புதன்சந்தை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி(50). இவர்களுக்கு லோகேஸ்வரி, சஞ்சய் என்ற மகன், மகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ரங்கசாமி இறந்து விட்டார். லோகேஸ்வரிக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், சஞ்சய்க்கு நிச்சயதார்த்தம் முடிந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக, நேற்று முன்தினம் காலை, முத்துலட்சுமி வீட்டை பூட்டி விட்டு, தனது அக்கா மகனுடன் வெளியூருக்கு திருமண பத்திரிகை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி, உள்ளே சென்று பார்த்த போது பீரோ, உடைக்கப்பட்டு அதிலிருந்த தோடு, வளையல், மோதிரம், தங்க சங்கிலி என 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சேந்தமங்கலம் போலீஸ் எஸ்ஐ பிரியா வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

The post வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Buddha Market ,Muthulakshmi ,Lokeswari ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை