×

நாகப்பட்டினத்தில் புகையிலை விற்ற கடைக்கு சீல்வைப்பு

 

நாகப்பட்டினம்,பிப்.5: நாகப்பட்டினம் நகர பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து நாகப்பட்டினம் மருந்து கொத்தளம் ரோடு, அக்கரைப்பேட்டை மீன்பிடி தளம், நாகப்பட்டினம் கீரைக்கொல்லைத் தெரு ஆகிய இடங்களில் உள்ள கடையில் நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், திருமருகல், கீழ்வேளூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆண்டனிபிரபு ஆகியோர் சோதனை நடத்தினர்.

இதில் 100 கிராம் அளவில் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த மூன்று கடைகளுக்கும் பூட்டி சீல் வைத்தனர். மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவுப்படி ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 15 நாட்கள் கடை மூடி வைக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கைவிட்டு தொழில் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

The post நாகப்பட்டினத்தில் புகையிலை விற்ற கடைக்கு சீல்வைப்பு appeared first on Dinakaran.

Tags : NAGAPATTAN ,Nagapattinam ,Nagapattinam Drug Kottalam Road ,Akaripettai Fishing Site ,Nagapattinam Keeraikollay Street ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்