×

பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல்

டேராடூன்: உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜ அரசு நடந்து வருகிறது. பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை தயாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் குழுவை உத்தரகாண்ட் அரசு நியமித்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மாநில முதல்வர் தாமியிடம் 740 பக்கங்களை கொண்ட இறுதி வரைவு மசோதாவை குழு சமர்ப்பித்தது.

முதல்வர் தாமி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை நிறைவேற்றுவதற்காக மாநில சட்டமன்றத்தின் 4 நாள் சிறப்பு கூட்டம் இன்று தொடங்குகிறது. இதில், பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

 

The post பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Uttarakhand Cabinet ,Dehradun ,BJP government ,Uttarakhand ,Chief Minister ,Pushkar Singh Thami ,Uttarakhand government ,Supreme Court ,Ranjana Prakash Desai ,Dinakaran ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...