×

அமெரிக்க தூதர் பேச்சு குவாட் என்கிற காரின் ஓட்டுநர் இந்தியா தான்

ஜெய்ப்பூர்: சீனாவிற்கு போட்டியாக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து தங்களுக்குள் பொருளாதார, ராஜதந்திர மற்றும் ராணுவ உறவுகளை ஆழப்படுத்துவதற்காக குவாட் என்கிற அமைப்பை கடந்த 2007ல் உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி பேசுகையில், ‘‘குவாட் அமைப்பில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பங்களிப்பை செய்கின்றன.

குவாட் என்கிற காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்து அமைப்பை இயக்கிக் கொண்டிருப்பது இந்தியா தான். அடுத்த இருக்கையில் இருக்கும் அமெரிக்கா, ஸ்டீயரிங்கை திருப்பி சரியான பாதையில் காரை வழிநடத்துகிறது. ஆனால் குவாட் மூலம் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மிகவும் வலுவாக வரையறுக்க வேண்டிய பொறுப்பில் இந்தியா உள்ளது’’ என்றார்.

 

The post அமெரிக்க தூதர் பேச்சு குவாட் என்கிற காரின் ஓட்டுநர் இந்தியா தான் appeared first on Dinakaran.

Tags : India ,Quad ,US ,Jaipur ,China ,USA ,Australia ,Japan ,Jaipur, Rajasthan ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...