×

சமூக நல திட்டங்களுக்கு பணம் தராதது ஒன்றிய அரசின் நிதி பயங்கரவாதம்: திரிணாமுல் காங். எம்பி தாக்கு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டம் உள்பட பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை எனன முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் நேற்று கூறுகையில்,‘‘ மேற்கு வங்க அரசு ஒன்றிய நிதிக்கான பயன்பாட்டுச் சான்றிதழ்களை வழங்கவில்லை என்று ஒன்றிய அரசின் குற்றச்சாட்டுக்கள் தவறானது. பாஜவை எதிர்க்கும் கட்சியால் ஆளப்படுவதால் மேற்கு வங்கத்தை ஒன்றிய அரசு குறிவைக்கிறது. வசமூக நலத் திட்டங்களுக்கு பணம் ஒதுக்காதது ஒன்றிய அரசின் நிதி கூட்டாட்சி பயங்கரவாதம்.

மேற்கு வங்கத்தை குறிவைக்கும் பாஜவின் மற்றொரு முயற்சியே தவிர வேறில்லை. ஏனெனில் அவர்கள் திரிணாமுல் கட்சியை அரசியல் ரீதியாக எதிர்க்க முடியவில்லை.அதனால் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரக வேலை திட்ட விதிகள் படி தொழிலாளர்களுக்கு வேலை முடிந்து 15 நாள்களுக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மம்தாவை எதிர்க்க முடியாததால் மக்களை அவர்கள் பழிவாங்குகின்றனர்’’ என்றார்.
கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ், ‘‘கடந்த 2011ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒன்றிய அரசு நிதி பயன்பாட்டு சான்றிதழ்களை சமர்ப்பிப்பதில் எந்த குறைபாடுகளும் இல்லை.இடது சாரி முன்னணி ஆட்சியில் இருந்த 2002-03 மற்றும் 2010-11 ம் ஆண்டுகளுக்கான சான்றிதழ்களுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது’’ என்றார்.

 

The post சமூக நல திட்டங்களுக்கு பணம் தராதது ஒன்றிய அரசின் நிதி பயங்கரவாதம்: திரிணாமுல் காங். எம்பி தாக்கு appeared first on Dinakaran.

Tags : EU ,Trinamool Kang. ,MB Attack ,Kolkata ,Chief Minister ,Mamta Banerjee ,Union ,West Bengal ,Trinamool Congress ,Derrick O ,Dinakaran ,
× RELATED திரிணாமுல் காங். எம்.பி. மகுவா மொய்த்ராவுக்கு எதிரான அவதூறு வழக்கு வாபஸ்..!