×

பழனிமாணிக்கம் எம்பி வழங்கினார் தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கத்தில் பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்

 

தஞ்சாவூர், பிப்.4: தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் புதிதாக ரவுண்டானா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது அந்த பகுதியில் இருந்த நிழற்குடையும் இடித்து அகற்றப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் நலன் கருதி தற்காலிகமாக அந்த பகுதியில் தென்னங் கீற்றுகளால் ஆன நிழற்குடைகள் அமைக்கப்பட்டன.

இதனை பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். தற்போது அதில் ஒரு நிழற்குடை சாய்ந்து விழுந்து கிடக்கிறது. இதனால் பயணிகள் பஸ்சுக்காக வெயிலில் நின்றபடி காத்திருக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பழனிமாணிக்கம் எம்பி வழங்கினார் தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கத்தில் பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Palanimanikkam ,Thanjavur Tolkappiyar square ,Thanjavur ,Tholkappiyar Square ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக...