×

மேல்புறம் சந்திப்பில் ₹5.3 கோடியில் சாலை சீரமைப்பு பணி அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

அருமனை, பிப்.4: குமரி மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 பகுதிகளில் சாலைகள் சீரமைக்கும் பணி துவங்கி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் குழித்துறை முதல் ஆலஞ்சோலை வழியாக செல்லும் சாலைப் பணிக்கு சுமார் ரூ.5.3 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகளை மேல்புறம் சந்திப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மேல்புறம் வடக்கு ஒன்றிய செயலாளர் சைனி கார்டன், பேரூர் செயலாளர் ஜெபக்குமார், அவை தலைவர் சிவனேசன், புலியூர்சாலை ஊராட்சி தலைவர் லிட்டில் பிளவர், இடைக்கோடு பேரூராட்சித் துணைத் தலைவர் ஷாஜி, வார்டு உறுப்பினர்கள் ராஜன் ஷர்ஜிலிரன், கிறிஸ்துதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* மின் தடை
மின் வாரிய அலுவலகம் தக்கலை கோட்ட செயற் பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பிப். 6 ம் தேதி செவ்வாய்க்கிழமை வியன்னூர் துணை மின் நிலையம் மற்றும் உயர் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆற்றூர், திருவட்டார், செருப்பாலூர், வெண்டலிகோடு, வலியாற்றுமுகம், பிலாவிளை, குமரன்குடி, பூவன்கோடு, வேர்கிளம்பி, மணலிக்கரை, சித்திரங்கோடு, சாண்டம், ஆத்துக்கோணம் ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது. இதே போன்று பேச்சிப்பாறை துணை மின் நிலையத்தில் 6 ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை கடையாலுமூடு, கோதையார், குற்றியார், மைலார், உண்ணீயூர்கோணம், சிற்றார், களியல், ஆலஞ்சோலை, பத்து காணி, திற்பரப்பு, திருநந்திக்கரை, மணியங்குழி, அரசமூடு போன்ற இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது.

The post மேல்புறம் சந்திப்பில் ₹5.3 கோடியில் சாலை சீரமைப்பு பணி அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mano Thangaraj ,Arumanai ,Kumari District Highway Department ,Kulitura ,Alancholai ,Dinakaran ,
× RELATED வெகுஜன விரோதியாக உலக மக்களால்...