×

பணம் பறித்த 5 பேர் கைது

சேலம், பிப்.4: சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த சன்னியாசிகுண்டு மாதாகோயில் தெருவை சேர்ந்தவர் சூரியபிரபு (30). பெயின்டரான இவர் கடந்த 31ம் தேதி களரம்பட்டி மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள், சூரியபிரபுவை கத்தியை காட்டி மிரட்டி, ₹2 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசில் சூரியபிரபு புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பணம் பறித்த கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன் (32), தினேஷ் (35), சதீஸ் என்கிற பில்லா (34), ராஜ்நிவாஸ் (34) மற்றும் தயாளன் என்கிற சேட்டு (35) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post பணம் பறித்த 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Surya Prabhu ,Sannyasikundu Mathakoil Street ,Kichipalayam, Salem ,Kalarampatti ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...