×

அண்ணா நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் அமைதி ஊர்வலம்: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினத்தையொட்டி, உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் தலையைில் நடந்த நினைவு தினம் அனுசரிப்பு, அமைதி ஊர்வலத்தில் செல்வம் எம்பி, எழிலரசன் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றனர். பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளரும், உத்திரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர் இதில் தலைமை தாங்கினார்.

இதில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகரச் செயலாளர் தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். இப்பேரணியானது, காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில், காஞ்சிபுரம் காந்திசாலை பெரியார் நினைவு தூண் அருகில் இருந்து அமைதி ஊர்வலமாக புறப்பட்டு காந்தி ரோடு, மூங்கில் மண்டபம், காமராஜர் வீதி, இரட்டை மண்டபம் வழியாக காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் சென்று அங்குள்ள அண்ணாவின் திருவுருவச்சிலையை அடைந்தது. அங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்வின்போது, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.சுகுமார், சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் சிகாமணி, ஒன்றியச் செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், படுநெல்லிபாபு, பகுதிச் செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன், தொமுச பேரவை நிர்வாகிகள் சுந்தரவதனம், இளங்கோவன், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்துசெல்வம், ஜெகநாதன், சுப்புராயன், மாவட்ட இளைஞர் அணி யுவராஜ், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், செவிலிமேடு மோகன், ராதாகிருஷ்ணன், மாரிமுத்து மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.

மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில், அண்ணா நினைவில்லத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக சார்பில், மேற்கு மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றியச் செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் சோமசுந்தரம், பகுதிச் செயலாளர்கள் எம்பி ஸ்டாலின், பாலாஜி, ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில், மாவட்டச் செயலாளர் வளையாபதி தலைமையில், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது நகர செயலாளர் மகேஷ், நெசவாளர் அணி ஏகாம்பரம், மதிமுக நிர்வாகிகள் ராமானுஜம், அருள், கண்ணன், உமாசங்கர், வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதிமுக (ஓபிஎஸ் அணி) சார்பில், மாவட்டச் செயலாளர் ரஞ்சித்குமார் தலைமையில், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அவைத்தலைவர் ரங்கநாதன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். தேமுதிக சார்பில், ஏகாம்பரம் தலைமையில் தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

* ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய திமுக : ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் திமுக சார்பில், ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலையில் உள்ள அண்ணா உருவசிலைக்கு தெற்கு ஒன்றியச் செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் சாந்தி சதிஷ்குமார், பேரூர் செயலாளர் சதிஷ்குமார், மாவட்ட துணை அமைப்பாளர் வளர்புரம் ஜார்ஜ், மாவட்ட கவுன்சிலர் பாலா, ஒன்றியக்குழு துணை தலைவர் மாலதி போஸ்கோ, பேரூராட்சி துணை தலைவர் இந்திராணி சுப்பிரமணி, கட்சி நிர்வாகிகள் சந்தவேலூர் சத்யா, நேரு, போஸ்கோ, அரிகிருஷ்ணன், அருண்பாரத், துளசி, சாதிக் சீனிவாசன், லோகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* பொது விருந்தில் எம்எல்ஏ: செங்கல்பட்டு பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான சக்தி விநாயகர் திருக்கோயிலில், பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தையொட்டி சிறப்பு பூஜை மற்றும் பொது விருந்து நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு பரிமாறி, பின்னர் மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்வின் போது சக்தி விநாயகர் திருக்கோயில் செயல் அலுவலர் விஜயன், பாடாலாத்திரி நரசிங்கபெருமாள் கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், ஆய்வர் பிரகாஷ், திருக்கோயில் பணியாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு உணவருந்தினர்.

The post அண்ணா நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் அமைதி ஊர்வலம்: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Anna Memorial Day Peace Procession ,Kanjipura ,Kanchipuram ,Selvam MB ,Eilarasan ,MLA ,Prophet ,Anna ,Uthramarur ,Sundar ,55th Memorial Day of Great Anna ,Anna Memorial Day Peace Procession in Kanjipura ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...