×

பெரியபாளையம் அருகே பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலகம்: புதிதாக கட்ட கோரிக்கை

ஊத்துக்கோட்டை: மாம்பள்ளம் கிராமத்தில் பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே மாம்பள்ளம் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டுவதற்கு இங்குள்ள ஊராட்சி அலுவலகம் சென்று தான் கட்ட வேண்டும். ஆனால் இந்த ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. இதனால் கட்டிடம் கடந்த 10 வருடங்களாக சேதமடைந்து மழைக்காலங்களில் மழை நீர் கசிந்து அலுவலகத்தின் உள்ளே உள்ள முக்கிய கோப்புகள் நனைந்தது கட்டிடம் இடிந்து விழும் நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே இதை அகற்றிவிட்டு புதிய ஊராட்சி கட்டிடம் கட்ட வேண்டும் எனஅப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையம் அருகே பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலகம்: புதிதாக கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dilapidated Panchayat Council Office ,Periyapalayam ,Oothukottai ,dilapidated ,panchayat council office ,Mampallam ,Mamballam panchayat ,
× RELATED திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு