×

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

புழல்: மீஞ்சூர் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி(37). டிராக்டர் வைத்துள்ளார். நேற்று ரகுபதி டிராக்டரில் விறகுகளை ஏற்றிகொண்டு ஓட்டிச்சென்றபோது, செங்குன்றம் அடுத்த அலமாதிக்கு செல்வதற்காக வண்டலூர் – மீஞ்சூர் 400 அடி சாலையில் வீரபாண்டியன் நகர் சர்வீஸ் சாலையில் பிளாட்பார்ம் மீது ஏறியபோது வண்டி தடுமாறி தலை கீழாக கவிழ்ந்தது. இதில், வண்டியை ஓட்டி வந்த ரகுபதி வண்டியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார், ரகுபதியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Raghupathi ,Meenjur Redtipalayam ,Veerabandian Nagar ,Vandalur-Meenjoor ,Alamathi ,Senkunram ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில்...