×

எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்தும் போணி ஆகவில்லை: செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்தும் போணி ஆகவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது: உலகத்தில் ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல, ஒரு எம்ஜிஆர் தான் சினிமாவில் இருந்து கட்சி ஆரம்பித்து, இந்தியாவில் 31 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி அமைத்தது. சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருக்கலாம். சிவாஜி கணேசன் அழுதால் அழுவார்கள். சிரித்தால் சிரிப்பார்கள். ஒரு கட்டத்தில் கட்சி ஆரம்பித்தார். அந்த கட்சி போணியாகவில்லை. நடிகர் டி.ராஜேந்தர் கட்சி ஆரம்பித்தார். அடுக்கு மொழியில் பேசினார்.

போணியாகவில்லை. அதனைத் தொடர்ந்து நான் தான் எம்ஜிஆரின் வாரிசு என்று பாக்யராஜ் கட்சி ஆரம்பித்தார். அவருக்கு தனி ரசிகர் வட்டாரமே இருந்தது. ஒன்றுமில்லாமல் போனது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று கூறி பின்பு பின் வாங்கினார். தற்போது விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். அந்த கட்சியை மக்கள் தான் முடிவு செய்வார்கள். கூட்டணியை பற்றி நாங்கள் எப்போதும் கவலைப்படுவதில்லை. யார் வந்தாலும் அவர்களையும் நாங்கள்தான் தூக்கிக் கொண்டு போக வேண்டும். எங்களுக்கு தொண்டர்கள் பலம் உள்ளது.

 

The post எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்தும் போணி ஆகவில்லை: செல்லூர் ராஜூ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Sellur Raju ,Madurai ,Former ,AIADMK ,Minister ,
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…