×

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சு சுமூகமாக நடைபெற்றது: இந்திய கம்யூனிஸ்ட் குழு பேட்டி

சென்னை: திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சு சுமூகமாக நடைபெற்றது என இந்திய கம்யூனிஸ்ட் குழு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலை சந்திக்க பாஜ தயாராகி வருகிறது. அதே நேரத்தில் இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மமக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் கடந்த 24-ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 9ம் தேதி திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் காங்கிரஸ் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, இந்திய கம்யூ. கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய கம்யூ. சார்பில் எம்.பி. சுப்பராயன், மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி பங்கேற்றுள்ளனர். 4 விருப்ப தொகுதியில் இருந்து 2 மக்களவை தொகுதிகள், ஒரு க மாநிலங்களவை சீட் கேட்க இந்திய கம்யூ. திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூ. கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது. அப்போது; திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சு சுமூகமாக நடைபெற்றது. கடந்த முறையை விட கூடுதலாக தொகுதிகளை கேட்டுள்ளோம்; முதல்வர் தமிழ்நாடு திரும்பியதும் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினர்.

 

 

The post திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சு சுமூகமாக நடைபெற்றது: இந்திய கம்யூனிஸ்ட் குழு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dimuga ,Indian Communist Group ,Chennai ,Indian Communist Party ,Dimugu ,BAJA ,India ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...