×

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு மக்கள் தங்கள் கருத்துகளை அனுப்பலாம் என அறிவிப்பு

சென்னை : திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு மக்கள் தங்கள் கருத்துகளை அனுப்பலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,”தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பங்களிக்க முடியும்.எழுத்துபூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகம் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கலாம். தமிழகம் முழுவதும் திமுக தேர்தல் அறிக்கைக் குழு பயணிக்க உள்ளதால் நேரடியாகவும் மக்கள் கருத்துகளை கூறலாம்.திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக பிப்.25 வரை பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரியப்படுத்தலாம். தேர்தல் அறிக்கை தொடர்பாக #DMKManifesto2024 என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட் செய்யலாம். dmkmanifesto2024@dmk.in மற்றும் 08069556900, 9043299441 என்ற எண்களில் மக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் ,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு மக்கள் தங்கள் கருத்துகளை அனுப்பலாம் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK Election Manifesto Preparation Committee ,Chennai ,Tamil Nadu ,DMK ,DMK manifesto preparation committee ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...