×

குற்றாலத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 394 ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி

*அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்

தென்காசி : குற்றாலத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் திருமண நிதி உதவி திட்டம் சார்பில் தாலிக்குத்தங்கம் வழங்கும் விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் 394 பயனாளிகளுக்கு 3 ஆயிரத்து 152 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.1.53 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவித்தொகைக்கான காசோலையினையும் வழங்கினார்.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் பழனிநாடார், ராஜா, சதன் திருமலைக்குமார், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிஆர்ஓ பத்மாவதி வரவேற்றார். மாவட்ட பஞ். தலைவி தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், நகர் மன்ற தலைவர் சாதிர், யூனியன் சேர்மன்கள் ஷேக்அப்துல்லா, திவ்யா, துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, சேக்தாவூது,

ஆறுமுகச்சாமி, மாவட்ட பொருளாளர் ஷெரீப், பொதுக்குழு உறுப்பினர்கள் ரஹீம், தமிழ்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், திவான்ஒலி, ஜெயக்குமார், சீனித்துரை, சிவன்பாண்டியன், சுரேஷ், பெரியதுரை, நகர செயலாளர்கள் வெங்கடேசன், அப்பாஸ், பிரகாஷ், பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி, முத்தையா, பண்டாரம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜா,

தங்கராஜ்பாண்டியன், சங்கீதா, துணை அமைப்பாளர்கள் ஐவேந்திரன் தினேஷ், முகமது அப்துல்ரஹீம், சுப்பிரமணியன், முகையதீன் கனி, சண்முகநாதன், ஜீவானந்தம், கரிசல் வேல்சாமி, கருப்பணன், சுரேஷ், மாரியப்பன் கருணாநிதி, குத்தாலிங்கம், ஆயிரப்பேரி முத்துவேல், பூபதி, செல்வம், சுந்தரம் என்ற சேகர், ஐடிஐ ஆனந்த், ஷேக்பரித், பால்ராஜ், ராம்துரை, வட்டார காங்கிரஸ் தலைவர் குற்றாலம் பெருமாள், நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு உதவவும், அவர்களின் மகள்களை சரியான வயது வரை படிக்க ஊக்குவிக்கவும், அரசால் திருமண உதவித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள், கலப்புத்திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் மற்றும் கைம்பெண்களின் மகள் ஆகியோருக்கு உதவும் வகையில் திருமண உதவித்திட்டங்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பள்ளிப்படிப்பு எனில் ரூ.25 ஆயிரம் நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும் பட்டப்படிப்பு எனில் ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பள்ளிப்படிப்பு எனில் ரூ.25 ஆயிரம் நிதியுதவியும், 6 கிராம் தங்க நாணயமும்.

பட்டப்படிப்பு எனில் ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத்திருமண உதவித்திட்டத்தின் கீழ் மணமகள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பள்ளிப்படிப்பு எனில் ரூ.25 ஆயிரம் நிதியுதவியில், ரூ.15 ஆயிரம் மின்னணு மூலமாகவும் ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. பட்டம், பட்டயப்படிப்பு பெற்றவர்களுக்கு ரூ.30 ஆயிரம் மின்னணு மூலமாகவும் ரூ.20 ஆயிரம் தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது’ என்றார்.

கலெக்டர் கமல் கிஷோர் பேசுகையில், ‘தென்காசி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ஈ.வெ.ரா. மணியம்மை விதவை மகள் திட்டத்தில் 315 பயனாளிகளுக்கும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத்திருமண உதவித்திட்டத்தில் 48 பயனாளிகளுக்கும், அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித்திட்டத்தில் 30 பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 394 ஏழை பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் 3152 கிராம் தங்கநாணயம் ரூ.1 கோடியே 93 லட்சத்து 94 ஆயிரத்து 256 ரூபாய் மதிப்பீட்டில் மற்றும் ரூ.1 கோடியே 53 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பெண்களுக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அத்தனை திட்டங்களையும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்’ என்றார். முன்னதாக, கலை பண்பாட்டுத்துறையின்’ மூலம் கரகாட்டம், கிராமியகலை நிகழ்ச்சி, ஒயிலாட்டம், தப்பாட்டம், பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலைநிழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட சமூகநல அலுவலர் செல்விமதிவதனா நன்றி கூறினார்.

The post குற்றாலத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 394 ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி appeared first on Dinakaran.

Tags : Social Welfare and Women's Rights Department ,Courtalam ,Minister ,KKSSR Ramachandran Tenkasi ,
× RELATED குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா