×

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு பயிற்சி

 

நீடாமங்கலம்.பிப்.3: தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் நீடாமங்கலத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையத்தில் 11, 12ம் வகுப்பில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் களப்பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருக்கடையூர், மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி வெள்ளப்பள்ளம் மற்றும் நாகூர் ஆகிய பள்ளிகளில் இருந்து சுமார் 120 மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் நெல் வயலில் மீன் வளர்ப்பு, மாடித்தோட்டம், பாரம்பரிய நெல் ரகங்கள், பரண் மேல் ஆடு வளர்ப்பு. விதை உற்பத்தி, மண்புழு உரம் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல், அசோலா வளர்ப்பு கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, நவீன விவசாயம், இயற்கை விவசாயம் ஆகிய தலைப்பில் பாடங்கள் நடத்தப்பட்டது. செயல் விளக்க பாடங்களை வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பிரபாகரன், அருள்செல்வி, தனுஷ்கொடி ஆகியோர் நடத்தினர். திட்ட ஒருங்கினைப்பாளர் பெரியார் இராமசாமி வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். முடிவில் மாணவர்கள் நன்றி கூறினர்.

The post வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Vocational Education Department ,Agricultural Science Institute ,Needamangalam.February ,Needamangalam Agricultural Science Station ,Needamangalam ,Directorate of Agricultural Education ,Tamil Nadu Agricultural University ,
× RELATED நீர், நிலவளத் திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவச பயிற்சி