×

நீர், நிலவளத் திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவச பயிற்சி

மதுரை, ஆக. 28: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் சாத்தையாறு பாசன பகுதி விவசாயிகளுக்கு நீர் மற்றும் நிலவளத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, அலங்காநல்லூர் மற்றும் வாடிப்பட்டி வட்டாரங்களிலுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2025 வரை மூன்று வருடங்களுக்கு இத்திட்டம் செயல்படவுள்ளது. நெல் உற்பத்தி அதனைத்தொடர்ந்து உளுந்து சாகுபடி, மக்காச்சோள சாகுபடியில் படைப்புழு மேலாண்மை, மேம்படுத்தப்பட்ட ரகம் உற்பத்தி தொழில்நுட்பங்கள், பயறு வகை பயர்களில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பமான டிரோன் செயல்பாடு போன்ற தொழில் நுட்ப பயிற்சிகளை நிலைய மற்றும் கள பயிற்சிகளலாக மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ட்ரோன் தொழிநுட்பங்களான விதைத்தல், நுண்ணூட்ட உரங்கள் தெளிப்பு, பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளித்தல் போன்றவற்றை செயல் விளக்கமாக அளிக்கப்பட உள்ளது. சாத்தையாறு பாசனப்பகுதி விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு மதுரை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், நீர்வள, நிலவளத்திட்ட பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

The post நீர், நிலவளத் திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவச பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chathayaru ,Madurai Agricultural Science Institute ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...