×

கும்பகோணத்தில் போக்குவரத்து பிரச்னையை தீர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

 

கும்பகோணம், பிப்.3: கும்பகோணம் மாநகரில் போக்குவரத்து பிரச்சனையை தீர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று காங்கிரஸ் விவசாய பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. கும்பகோணத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தலைவர் ஓ.வி.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். குடந்தை குரு வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கி அதில் இளைஞர்களுக்கு முன்னுரிமை தர இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது, கும்பகோணம் மாநகரில் பெருகிவரும் போக்குவரத்து பிரச்சனையை தீர்க்க ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் அய்யப்பன், சுவாமிமலை ராமலிங்க ஸ்தபதியார், ராஜாங்கம், தண்டபாணி, திருவையாறு பாலசுப்ரமணியன், கந்தசாமி, மீனாட்சி மற்றும் பலர் பேசினர். பாலு காடுவெட்டியார் நன்றி கூறினார்.

 

The post கும்பகோணத்தில் போக்குவரத்து பிரச்னையை தீர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Congress Agriculture Wing ,Thanjavur North District Congress Agriculture Wing ,President ,O. V. Krishnaswamy ,Dinakaran ,
× RELATED ஜிஎஸ்டி துணை ஆணையர் வீட்டில் சிபிஐ சோதனை