×

ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக கேரள சட்டபேரவையில் தீர்மானம்

திருவனந்தபுரம்: ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக நேற்று கேரள சட்டேபரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நிதியமைச்சர் கே.என். பாலகோபால் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியது: கேரளாவுக்கு தேவையான நிதியை ஒதுக்காமல் ஒன்றிய அரசு கடும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் கேரள அரசுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள கூட்டாட்சி முறையை அழிக்கும் வகையில் ஒன்றிய அரசின் அணுகுமுறை உள்ளது.தங்களுக்கு கீழ்தான் மாநில அரசுகள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும். கேரளாவுக்கான மானியங்களை தடுத்து வைப்பதையும், கடன் வரம்பை குறைப்பதையும் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக கேரள சட்டபேரவையில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Kerala Assembly ,Union Government ,Thiruvananthapuram ,Kerala Chatteparava ,Finance Minister ,K.N. Balagopal ,Kerala ,Legislative Assembly ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...