×

திண்டுக்கல் சந்தையில் வெங்காய ஏற்றுமதி நிறுத்தம்: புதிதாக விதித்த 40% வரியை நீக்க ஒன்றிய அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை

திண்டுக்கல்: வெங்காய ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு விதித்துள்ள புதிய வாரியால் திண்டுக்கல் சந்தையில் டன் கணக்கில் வெங்காயங்கள் தேக்கம் அடைந்துள்ளன. திண்டுக்கல்லில் வெங்காய விற்பனைக்கு பிரத்யேகமாக செயல்படும் சந்தையில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சிறிய மற்றும் பெரிய வெங்காயங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். 5 மாதங்களுக்கு மேலாக பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை ஒன்றிய அரசு சமீபத்தில் நீக்கியது. அதேவேளையில் அனைத்து ரக வெங்காய ஏற்றுமதிக்கும் 40 விழுக்காடு புதியதாக வரிவிதிப்பையும் ஒன்றிய அரசு அமல்படுத்தியது.

இதன் காரணமாக திண்டுக்கல் சந்தையில் வெங்காய ஏற்றுமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளூர் வியாபாரிகளுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக விலை குறைந்ததோடு டன் கணக்கில் வெங்காய மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. விலை குறைந்ததால் வெங்காயத்தை விற்பனை செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள். நம் நாட்டில் விளைவிக்கப்படும் சிறிய மற்றும் பெரிய வெங்காயத்திற்கு வெளிநாடுகளில் நலன் வரவேற்பு இருக்கும் நிலையில், ஏற்றுமதி வரியை ரத்து செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

The post திண்டுக்கல் சந்தையில் வெங்காய ஏற்றுமதி நிறுத்தம்: புதிதாக விதித்த 40% வரியை நீக்க ஒன்றிய அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,union government ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு