×

பெயிண்டர் மண்டை உடைப்பு

 

சேந்தமங்கலம், பிப்.3: சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் அருண்ராஜ் (30). நாமக்கலில் பெயிண்டராக வேலை செய்து வருகின்றார். இவர் கடந்த மாதம் காளப்பநாயக்கன்பட்டி அரசு டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது நஞ்சுண்டாபுரம் தேவேந்திர தெருவை சேர்ந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மனோஜ், அருண் ராஜிடம் சிகரெட் கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் சிகரெட் இல்லை என கூற, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது மனோஜ் தன் நண்பருடன் சேர்ந்து, அருண்ராஜை பீர் பாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் மனோஜ் உட்பட 4பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மனோஜ் நண்பர்கள் சின்னத்தம்பி மகன் சரண்குமார் (19), ராஜா மகன் சபீனாத் (19) இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.

The post பெயிண்டர் மண்டை உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Arunraj ,Kalapanayakanpatti Nanjundapuram ,Namakkal ,Kalapanayakanpatti government ,Tasmac ,Nanjundapuram Devendra Street ,Dinakaran ,
× RELATED மாதிரி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு வரவேற்பு