- கருத்தரங்கு
- அரசு பள்ளி
- கோத்தகிரி
- கண்ணெரிம்கு
- ஊட்டி
- கன்னேரிம்கு அரசு மேல்நிலைப்பள்ளி
- கோத்தகிரி
- முதல்வர்
- அரவிந்தன்
- தமிழ்
- நாடு அறிவியல் இயக்கம்
- நிலை
- கன்வீனர்
- கே.ஜே.இராஜூ
ஊட்டி,பிப்.3: கோத்தகிரி அருகேயுள்ள கன்னேரிமுக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் அரவிந்தன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே.ஜே.இராஜு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு பேசியதாவது: ஒரு நாட்டின் வளம் என்பது மக்களின் அறிவியல் தொழில் நுட்ப அறிவால் நிர்ணயிக்கப்படுகிறது.உலக அளவில் சீனா,தென்கொரியா போன்ற நாடுகள் முன்னணி வகிக்கும் நிலையில் இந்திய மக்களின் அறிவியல் எழுத்தறிவு விகிதம் வெறும் இரண்டரை சதவீதமாக இருப்பது வருந்தத்தக்கது.
30 ஆண்டுக்கு முன்பு போபாலில், ஏற்பட்ட விஷ வாயு விபத்தில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்வை இழந்தனர். ஒரு ஈரத்துணியை முகத்தில் மூடிக்கொண்டால் விஷ வாயுவின் தாக்கத்திலிருந்து எளிதாக தப்பிக்க முடியும். ஆனால், அதுபோன்று செய்யாத நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இன்று நாம் உண்ணும் துரித உணவு மற்றும் நொறுக்கு தீனிகளில் எத்தனை வகையான வேதிப்பொருட்கள் கலந்துள்ளன என்ற விழிப்புணர்வு இல்லாத மக்கள் பல நோய்களுக்கு கதவை திறந்து வைத்துள்ளனர்.எனவே, அடிப்படை அறிவியல் அறிவு அனைவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும், என்றார். முன்னதாக வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார். ஆசிரியர் சுந்தர் நன்றி கூறினார்.
The post கோத்தகிரி கன்னேரிமுக்கு அரசு பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு appeared first on Dinakaran.