×

அண்ணாமலை மீது முட்டை வீச வந்த காங்கிரஸ் நிர்வாகி

வாணியம்பாடி: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என்று காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா ஆன்லைன் மூலம் போலீசாருக்கு புகார் அளித்திருந்தார். இந்தநிலையில் வாணியம்பாடி பஸ்நிலையத்தின் அருகே உள்ள முக்கிய வீதிகள் வழியாக அண்ணாமலை நேற்று நடைபயணம் சென்றார். அப்போது அவர் மீது முட்டை வீசி எதிர்ப்பு தெரிவிப்போம் என்று கூறி வீட்டில் இருந்து முட்டைகளுடன் அஸ்லம் பாஷா புறப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி போலீசார் அஸ்லம்பாஷா மற்றும் உடனிருந்த காங்கிரசாரை வீட்டுக் காவலில் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post அண்ணாமலை மீது முட்டை வீச வந்த காங்கிரஸ் நிர்வாகி appeared first on Dinakaran.

Tags : Congress ,Annamalai ,Vaniyambadi ,President ,Aslam Pasha ,BJP ,Tirupattur district ,
× RELATED தேர்தல் விதிகளை மீறியதாக கோவை தொகுதி...