×

இன்று அண்ணா நினைவு நாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்த மாற்று ஏற்பாடு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா சதுக்கம் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. எனவே, இன்று (3ம் தேதி) நடைபெற உள்ள அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு, அண்ணா, எம்ஜிஆர் நினைவிடத்திற்கு இடையே அமைந்துள்ள பகுதியில் அண்ணாவின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்திடுமாறு, அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post இன்று அண்ணா நினைவு நாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்த மாற்று ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Anna memorial ,Chennai ,Tamil Nadu Government ,Anna Sukum Square ,Kamarajar Road, Chennai ,Anna ,MGR ,Memorial ,
× RELATED சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு;...