×

பிபிஏ, பிசிஏ ஆகிய படிப்பு தொடங்க ஏஐசிடிஇ ஒப்புதல் எதிர்த்து கலைக் கல்லூரிகள் வழக்கு: ஐகோர்ட் விசாரணை

சென்னை: உயர்கல்வித்துறையில் கலை, அறிவியல் சார்ந்த கல்வி நிறுவனங்களை யு.ஜி.சி. எனப்படும் பல்கலை மானியக் குழுவும், பொறியியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அமைப்பும் கட்டுப்படுத்துகிறது. பி.பி.ஏ., பி.சி.ஏ., ஆகிய படிப்புகளை புதிதாக தொடங்கவும், தற்போது நடத்திவரும் கலை அறிவியல் கல்லூரிகளும் ஏஐசிடிஇயிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு தனியார் சுயநிதி கலை அறிவியல் மேலாண்மை கல்லூரிகள் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஏஐசிடிஇ அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சோமையாஜி, ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகி, ஏஐசிடிஇ வரம்பிற்குள் இந்த படிப்புகளை கொண்டு வர அதிகாரம் இல்லை. உரிய சட்ட திருத்தம் இல்லாமல் இந்த அதிகாரத்தை மேற்கொள்ள முடியாது. இதனால். ஆசிரியர்களுக்கும் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் என்று வாதிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக 5ம் தேதி முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post பிபிஏ, பிசிஏ ஆகிய படிப்பு தொடங்க ஏஐசிடிஇ ஒப்புதல் எதிர்த்து கலைக் கல்லூரிகள் வழக்கு: ஐகோர்ட் விசாரணை appeared first on Dinakaran.

Tags : AICTE ,CHENNAI ,UGC ,University Grants Commission ,All India Council for Technical Education ,Dinakaran ,
× RELATED இளநிலை பட்டப்படிப்பில் 75% மதிப்பெண்...