×

120 டன் அரியவகை கடல்அட்டை கடத்தல்: 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 120 கிலோ கடல் அட்டை கடத்தி வந்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து வேன், பைக்கை பறிமுதல் செய்தனர். மன்னார் வளைகுடாவில் காணப்படும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களில் ஒன்று கடல் அட்டை. அரிதான இந்த கடல் அட்டைகளை பிடிக்க இந்தியாவில் தடை உள்ளது. இருப்பினும் இந்த கடல் அட்டைகள் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு, ஆண்மை விருத்தி மருந்துகள் தயாரிப்பதற்காக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மத்தியபாகம் போலீசார் இரவு ரோந்து பணியில் இருந்தனர். அப்போது டபிள்யூஜிசி ரோட்டில் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே வந்த ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அந்த வேனில் தடை செய்யப்பட்ட அரியவகை கடல் அட்டைகள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து வேனில் 10 சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 120 கிலோ எடையிலான கடல்அட்டையை வேனுடன் பறிமுதல் செய்தனர்.

மேலும் வேன் டிரைவர் முத்துகருப்பசாமி(41), வேனில் இருந்த சக்திவேலு(38) மற்றும் வேனுக்கு பாதுகாப்பாக பைக்கில் வந்த கருப்பசாமி(32) ஆகியோரை போலீசார் கைது செய்து, பைக்கையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கடல் அட்டைகள் தூத்துக்குடி கடலில் பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்பட்டு, அங்கிருந்து மீளவிட்டான் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, பதப்படுத்தி இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. பிடிபட்ட கடல் அட்டையின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என தெரிகிறது.

The post 120 டன் அரியவகை கடல்அட்டை கடத்தல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Gulf of Mannar ,Dinakaran ,
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு